ETV Bharat / state

தாராபுரம் உயர்மின் கோபுர விவகாரம்... பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் தொடக்கம் - Tirupur District News

திருப்பூர்: உயர்மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி விவசாயி ஒருவர் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

tarapuram-high-tower-issue
tarapuram-high-tower-issue
author img

By

Published : May 20, 2020, 11:29 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குழந்தைபாளையம் பகுதியில் வசித்துவரும் சம்பத் குமார் என்பவருக்குச் சொந்தமாக குண்டடம் ஒன்றியம் மானூர்பாளையத்தில் 4.40 ஏக்கர் விவசாய நிலத்தில், புகளூரிலிருந்து திருச்சூர்வரை செல்லும் 320/கே.வி உயர்மின் கோபுரப்பாதை அமைக்க பவர் கிரிப் ஆஃப் இந்தியா நிறுவனம் அளவீடு செய்துள்ளது.

சம்பத் குமாரின் நிலத்தின் மொத்த நீளம் 800 அடி. அந்த நிலத்தின் நடுவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன. அப்படி அமைந்தால் நிலத்தை எதற்கும் பயன்படுத்த முடியாது எனக் கூறிய சம்பத் குமார், இழப்பீடு வழங்க வலியுறுத்தி குடும்பத்துடன் கடந்த சில தினங்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களுடன் உயர் மின்னழுத்த கோபுர கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் ஈசன், கொள்கைபரப்புச் செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் முத்து விசுவநாதன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

tarapuram-high-tower-issue
ஆடு, மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

இந்த நிலையில், உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிகளை அலுவலர்கள் 100 காவலர்கள் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளனர். அதனால் ஆடு, மாடுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்தப்போவதாக சம்பத்குமார், விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உயர்மின் கோபுரங்களால் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.