இது குறித்து திருப்பூரில் கள் இயக்கத் தலைவர் நல்லசாமி செய்தியாளர்களை இன்று சந்தித்துப் பேசியதாவது:
பெண்களுக்கென்று மதுரையில் மதுக்கடை ஆரம்பித்திருப்பது பெண் குடிகாரர்களை ஊக்குவிக்கும் செயலாகும். இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கென்று தனி மதுக்கடை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சென்னை மெரினா கடற்கரையை உலகத்தரம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதை கல் இயக்கம் வரவேற்கிறது.
அதேவேளையில் மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அப்புறப்படுத்த வேண்டியது அவசியமாகும், அதனை முதலில் செய்துவிட்டு திருத்தம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டும் 30 ஆண்டுகளுக்கு மேல் கள்ளுக்கு தடை இருப்பது என்பது தமிழினத்திற்கும் மக்களுக்கும் எதிரானது. எனவே, இந்தத் தடையை நீக்க வேண்டும் என வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்துவதை விரிவுப்படுத்த கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தெலங்கானா என்கவுண்டர்: பிரபலங்கள் கருத்து!