திருப்பூர் மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, "தமிழ்நாட்டை 15 ஆண்டுகள் ஜெயலலிதா ஆட்சி செய்தார். 10 ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சி செய்தார். நான் இன்றைக்கு 4 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளேன். தமிழ்நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே.
என் தந்தை 1943ஆம் ஆண்டில் 30 ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்தவர். ஸ்டாலினை நம்பி சென்ற அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கிறார்கள். அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது.
திமுகவை காப்பாற்றிக் கொள்ளுங்கள். கருணாநிதிக்கு பிறந்த பல மகன்களில் ஒருவர் தான் ஸ்டாலின். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரன் ஆன அழகிரிக்கு பதவி கொடுக்காமல், அறிவாலயத்திற்கு வரக்கூடாது என்று நினைத்தவர் ஸ்டாலின். தன் சொந்த அண்ணனுக்கு ஒன்றும் செய்யாத அவர், நாட்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்வார்" என கடுமையாக சாடி பேசினார்.
இதையும் படிங்க: சகாயம் வந்தால் அவருக்கு சகாயம் செய்யுமா அரசியல்?