ETV Bharat / state

நீர் நிலைகளில் கொட்டப்படும் மனிதக்கழிவுகள்: அத்துமீறும் தனியார் நிறுவனங்கள்! - செப்டிக் டேங்க் சிறப்பு தொகுப்பு

திருப்பூரில் வீட்டு கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளிலிருந்து அகற்றப்படும் மனிதக் கழிவுகள், சுகாதார விதிமுறைகளை மீறும் வகையாக பொது மைதானம், விவசாய நிலம், கிணறு, குளம், குட்டை உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் கொட்டப்படுகின்றன. கொட்டும்போது துர்நாற்றம் எழாமல் தடுக்க கழிவுடன் கெமிக்கல் கலப்பதால், மண் வளமும், நிலத்தடி நீரும் பாழாகி வருவது குறித்த சிறப்பு தொகுப்பு...

நீர் நிலைகளில் கொட்டப்படும் மனிதக்கழிவுகள்

author img

By

Published : Dec 23, 2020, 10:30 PM IST

திருப்பூரில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. குடியிருப்புப் பகுதியிலுள்ள கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் தனியார் டேங்கர் லாரிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றன. வீடுகளில் இருந்து டேங்கர் லாரிகளுக்கு மாற்றப்படும் மனிதக்கழிவுகள் குளம், குட்டை, விவசாய நிலங்களில் நள்ளிரவில் கொட்டப்படும் அவலம் நீடிக்கிறது.

திருப்பூர் நகர் பகுதி வீடுகளில் எடுக்கப்படும் கழிவுகள் பெரியாய்ப்பாளைத்தில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்பது விதிமுறை. கழிவுநீர் சேகரிக்கும் தொட்டிகளை சுத்தம் செய்யும் தனியார் நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல், விதிமுறைகளை மீறி திறந்த வெளியிலும் கொட்டி வருகின்றன. நகர வீடுகளில் அகற்றப்படும் கழிவுகள் நொய்யல் ஆறு, நாஞ்சுராயன் குளம் உள்ளிட்ட பகுதிகளில், டேங்கர் லாரிகளில் இருந்து திறந்துவிடப்படுகின்றன. இதனால் நிலம் மற்றும் நிலத்தடி நீரின் தன்மை மாசடைந்து வருகிறது.

மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் அகற்றம் செய்யும் பணிக்கான தனியார் லாரிகள் மாநகாராட்சியில் பதிவு பெற்றுள்ளன. மொத்தம் 20 நிறுவனங்களை சார்ந்த 35 லாரிகள் நடப்பு ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும், வீடுகளில் கழிவுகளை அகற்றும்போது சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்காமலும் கழிவுகளை அகற்றி வருகின்றன. இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களில் பலருக்கும் இன்ஸ்சூரன்ஸ் ஏற்பாடுகள் இல்லை. நச்சுவாயு அளக்கும் கருவியை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் தனியார் லாரிகளில் அவை இருப்பதில்லை.

மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீரை உக்கடம் மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் மட்டும் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாதமும் டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சியில் இருப்பதை போன்ற கழிவுநீர் பண்ணை வசதி புறநகர் பகுதிகளில் இல்லாததால் சாக்கடை கால்வாய், தென்னந்தோப்புகள், மைதானங்கள், குளம், குட்டைகளில் கழிவுகளை கொட்டிவிடுதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொட்டும் போது துர்நாற்றம் எழாமல் இருக்க கழிவுநீரில் ஒருவித கெமிக்கலை கலக்குகின்றனர். இதனால் கழிவு, பச்சை நிற நுரையுடன் வெளியறுகிறது. இதனால் மண் வளம் குன்றி செடி, கொடிகள் கூட முளைக்காத நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில், நொய்யல் ஆறு பகுதியிலுள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீரை செலுத்திவிட்டு டேங்கர் லாரி தப்பியது. இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் பட்டப்பகலிலும், மாலையிலும் கூட கழிவுநீர் சேகரிக்கும் லாரிகள் நுழைந்து கழிவுகளை எடுக்கின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். கழிவுகளை அகற்றும் லாரிகளுக்கான விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டுமென்றும், பின்பற்றாவிடில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து முருகம்பாலையம் பகுதியில் வசிக்கும் வடிவேலு கூறியதாவது, “ திருப்பூர் மாநகராட்சியில் தற்போது அதிகளவில் குடியிருப்புகள் பெருகியுள்ளது. அனைத்து குடியிருப்புகளிலும் தனியார் நிறுவனும் மூலம் கழிவுநீருகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கப்படும் கழிவுகள் நதியில் கொட்டப்படுகிறது. குறிப்பாக நொய்யல் நதியில் கொட்டப்படுவதால் அதன் அருகேவுள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகமும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் எப்போதாவது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் லாரி நிறுவனத்தின் மீது அபராதம் மட்டும் வசூல் செய்கின்றனர். பொதுமக்களின் மீது அலுவலர்களுக்கு அக்கரை இல்லையா அல்லது கையூட்டு ஏதேனும் வாங்கி கொண்டு இவ்வாறு நடந்துகொள்கின்றனரா எனத் தெரியவில்லை” என்றார்.

இது குறித்து பாரதி நகர் குடியிருப்பு வாசி விஜய் கூறுகையில், “ திருப்பூர் மாநகரில் குடியிருப்புகளில் தனியார் நிறுவன லாரிகள் மூலம் எடுக்கப்படும் கழிவுநீரானது சாலையின் ஓரத்தில் கொட்டப்படுகிறது. ஏற்கனவே மழையின் காரணமாக சாலையில் இருக்கும் தண்ணீரில் கலந்து வீட்டினுள் புகுந்துவிடுகிறது. இச்சம்பவ குறித்து மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரதீப் கிருஷ்ண குமார் இது குறித்து செல்ஃபோனில் கூறியதாவது, "மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்றும் லாரிகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. வீடுகளில் எடுக்கப்பட்ட கழிவுநீரை நினைத்த இடங்களில் கொட்டக்கூடாது. பெரியாயிபாலையத்தில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணையில் மட்டுமே சேர்க்க வேண்டும். விதிமுறை மீறி இயங்கும் கழிவு நீர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், லாரியின் பதிவு உரிமம் ரத்து செய்யப்படும். விதிமீறும் லாரிகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம். திருப்பூர் புறநகர் பகுதிகளில் கழிவுநீரை சுகாதாரமான முறையில் அழிக்க அந்தந்த பேரூராட்சி, நகராட்சிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடிநீரில் கலந்த கழிவுநீரால் ஒருவர் உயிரிழப்பு: கொந்தளித்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.