திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் 700 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். கரோனா காலத்தில் முன்னின்று பணியாற்றிவரும் சூழலிலும் தங்களுக்கு 7500 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தற்போதுவரை செப்டம்பர் மாத ஊதியம் வழங்காமல் தங்களை அலைக்கழிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியமாக ரூ. 510 வழங்காமல் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் குறைவாக வழங்குகிறது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் தங்கள் செம்படம்பர் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாதம் 10ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்கிட வேண்டும், தீபாவளிக்கு நியாயமான போனஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: அரசு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்' - வருவாய் ஊழியர்கள் கோரிக்கை