ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் வாகனங்கள் இயக்கப்படாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும் என காத்திருந்த போதும் பழைய நடைமுறையே பின்பற்றப்படுவதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும், இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும் மண்டலங்களுக்கு இடையே வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கக் கோரியும் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போராட்டக்காரர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். மேலும், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் நாங்கள் தீக்குளித்து சாவதை தவிர வேறு வழியில்லை என வாடகை ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.