திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரூர் சாலையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் காவலர் இருளாண்டி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்தச் சோதனை சாவடி வழியே, வரும் வாகனங்களை சோதனை செய்கையில், அவர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் கேட்டுள்ளார். அதனை ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே வைரலாகப் பரவியது.
இந்தச் சம்பவம் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டலுக்கு தெரிய வர, காவலர் இருளாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: காவலர் தேர்வில் வெற்றிபெற்றும் பணிக்கு செல்ல முடியாத இளைஞர்