தமிழ்நாடு முழுவதும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்திருக்கும் சூழ்நிலையில், தடையை மீறி தினம்தோறும் வேல் யாத்திரை பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று (நவம்பர் 22) மாலை திருப்பூரில் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பெரியார் தடி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு காவல் துறை ஏற்கனவே அனுமதி மறுத்துள்ளதால், தடையை மீறி ஊர்வலத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனால் காவல் துறையினருக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.