திருப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்ததுள்ளது. கரோனா பாதிப்பைத் தடுக்கும்வகையில் திருப்பூரில், வடக்கு காவல் துறையினர் எமன் உருவ பொம்மை அணிந்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தன்னார்வலர்களுடன் இணைந்து ஊர்வலமாகச் சென்றனர். மேலும் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்களிடம் நோயின் தீவிரம் குறித்து எடுத்துக் கூறி, பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தினர். வடக்கு காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதையும் படிங்க... மதுரையில் ஊரடங்கை மீறி உலா வந்தவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறையினர்!