குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் ஆர்ப்பாட்டமானது இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல் துறையினரின் தடுப்புகளைத் தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து, திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், டவுன்ஹால் மேம்பாலம் பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: அமித் ஷாவின் அராஜகத்தை கண்டிக்கிறோம் - சிஏஏவுக்கு எதிரான போராட்டம்