திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் குமார் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த சுஜாதா வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் மாதம் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு, பிரேம்குமாரும் சுஜாதாவும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சுஜாதாவின் பெற்றோர்கள் சில நாட்களுக்கு முன்பு பிரேம் குமாரிடமிருந்து சுஜாதாவைப் பிரித்து சென்றுள்ளனர்.
பணத்திற்காகத்தான் பிரேம்குமார் சுஜாதாவை காதலித்ததாக பொய் சொல்லியதோடு, பிரேம்குமாரை அழைத்து மிரட்டி 'சுஜாதாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை' என்று சுஜாதாவின் குடும்பத்தினர் பிரேம்குமாரிடமிருந்து கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.
'தற்போது சுஜாதாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்' என பிரேம்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் அவரைத் தடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகராட்சி தண்ணீரைக் குடித்த 50 பேருக்கு வாந்தி, பேதி!