திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதிக்கு வெளி மாவட்டங்களிலிருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரேஷன் அரிசி வழங்குவதற்காக நேற்று (ஜூன் 12) டோக்கன் விநியோகிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்று ரேசன் அரிசியை பெறுவதற்காக காலை முதலே அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர். பின்னர், ரேஷன் கடை அலுவலர் வந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் விரைந்து பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்ற 40 நாள்களாக திருப்பூரில் கரோனா தொற்று இல்லாத நிலையில், நேற்றைய தினம் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இலவச அரிசியை பெறுவதற்காக மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தது, மீண்டும் கரோனா பரவலை அதிகரிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...மும்பையில் இருந்து கரோனாவுடன் திரும்பிய இளைஞர் உயரிழப்பு