திருப்பூர்: பல்லடத்தில் திமுக மற்றும் இந்து முன்னேற்ற கழகத்தின் கொடிக்கம்பங்களை சேதப்படுத்திய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு, வடுகபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு கட்சியினரின் கொடிக்கம்பங்கள் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை அங்கிருந்த பல்வேறு கட்சி கொடிக்கம்பங்களில், திமுக மற்றும் இந்து முன்னேற்ற கழகத்தின் கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் ஆக்ஸா பிளேடால் அறுத்து அடியோடு பிடுங்கி சாலையில் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
![dmk post](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/2337748_tiruppur.jpg)
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
dmk post
இச்சம்பவம் பற்றி தகவலறிந்த இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும், அப்பகுதியில் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.