திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வரப்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (வயது 75) தனது உறவினரின் மரண சான்றிதழ் பெறுவதற்காக தாராபுரம் வருவாய் அலுவலரை சந்தித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
நஞ்சியம்பலயம் பகுதியில் வேலுச்சாமி சென்று கொண்டிருந்தப்போது பின்னால் வந்த தாராபுரம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மோதியதில் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆம்புலன்ஸ் மோதி நிற்காமல் சென்றுவிட்டதால், ஆம்புலன்சை துரத்திப் பிடித்த பொதுமக்கள் காங்கேயம் காவல் நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நாகராஜை ஒப்படைத்தனர். இதில் ஓட்டுநர் குடி போதையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுபோதையில் சண்டை - கணவன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி