ETV Bharat / state

வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: போலி வீடியோ வெளியிட்ட பீகார் இளைஞரை அதிரடியாக கைதுசெய்த போலீஸ் - பீகார் இளைஞரை கைது செய்த போலீசார்

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல, போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பீகார் இளைஞரை, தெலங்கானா மாநிலத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பீகார் இளைஞர் கைது
பீகார் இளைஞர் கைது
author img

By

Published : Mar 7, 2023, 5:04 PM IST

திருப்பூர்: கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூரில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை நிறுவனங்களில், ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை, சிலர் தாக்குவது போல போலியான 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் கோவை, திருப்பூரில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் அச்சத்துக்கு ஆளாகினர்.

இணையத்தில் பகிரப்பட்ட வீடியோக்கள் போலியானவை என விளக்கம் அளித்த தமிழ்நாடு காவல்துறை, வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதன் அடிப்படையில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (25) தனது டிவிட்டர் பக்கத்தில், வேறு மாநிலங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை, தமிழ்நாட்டில் தாக்கப்பட்டதாக சித்தரித்து போலி வீடியோக்களை பகிர்ந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரூபேஷ் குமாரை தொடர்பு கொண்ட சைபர் கிரைம் போலீசார், போலியான வீடியோக்களை டிவிட்டர் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தினர். ஆனால், ரூபேஷ் குமார் அந்த வீடியோக்களை அகற்றாமல், மேலும் சில போலி வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரூபேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த, திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையே பீகார் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரூபேஷ், தெலங்கானா மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்துக்குச் சென்ற தனிப்படை போலீசார், ரூபேஷ் குமாரை நேற்று (மார்ச் 6) கைது செய்தனர். அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வடமாநில இளைஞர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள் இணையத்தில் பரவியதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்தனர். சென்னை, திருப்பூர் மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று கோவை மாவட்டத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் வசிக்கும் இடத்தில் ஆய்வு நடத்திய பீகார் அதிகாரிகள் குழுவினர், அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். பீகார் தொழிலாளர்களின் கோரிக்கைகளை, மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்தனர். வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் போலியானது என, பீகார் தொழிலாளர்களுக்கு அம்மாநில அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். எனினும், சில தொழிலாளர்களுக்கு இன்னும் அச்சம் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.

இதையும் படிங்க: நெல்லையில் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.