ETV Bharat / state

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை - tiruppur district news

திருப்பூர்: பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வடமாநிலத் தொழிலாளர் ஒருவரை சக தொழிலாளர் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டச் செய்திகள்  வடமாநிலத்தொழிலாளர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை  tiruppur district news  north indian labour murdered
திருப்பூர் வடமாநிலத்தொழிலாளர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை
author img

By

Published : Sep 1, 2020, 4:44 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த கே.அய்யம்பாளையம் பகுதியில் பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான பேவர் பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.

இந்த நிறுவனத்தில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வீர்சந்த், ராம்குமார் என்ற இருவரும் ஒரே அறையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தபோது அங்கு வீர்சந்த் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்து தொழிற்சாலையின் உரிமையாளர் பத்நாபனுக்கும், பல்லடம் காவல் துறையினருக்கும் சக தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டச் செய்திகள்  வடமாநிலத்தொழிலாளர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை  tiruppur district news  north indian labour murdered
வீர்சந்த்தை குத்திக் கொலை செய்ய பயன்படுத்தி பீர் பாட்டில்

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் வீர்சந்த் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பல்லடம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில், ராம்குமார் வீர்சந்திடம் ஐந்தாயிரம் பணம் பெற்றிருந்ததும் அதை திருப்பிக்கேட்ட போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீர்சந்த்தை ராம்குமார் பீர் பாட்டிலால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் காவல் துறையினர் தப்பியோடிய ராம்குமாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: இறந்த 7 வயது மகனுடன் மூன்று நாள் வசித்த தாய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.