புதிய வாக்காளர்களின் ஆதரவு அதிமுகவிற்கு தான்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - new voters will vote ADMK
திருப்பூர்: தமிழ்நாடு அரசின் சிறப்பு செயல்பாடுகளால் புதிய வாக்காளர்கள் அதிமுகவிற்கு உறுதுணையாக நிற்பார்கள் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Minister
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் மற்றும் திருத்த முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கிராமப்புற மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளும், வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே புதிய வாக்காளர்கள் அதிமுக அரசுக்கு உறுதுணையாக இருப்பார்கள்' எனத் தெரிவித்தார்.