ETV Bharat / state

பட்டா கத்தியால் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிய இளைஞர்கள்; வீடியோ வைரல்! - பெட்ரோல் பங்க் ஊழியர்

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் பட்டாக்கத்தியை காட்டி இளைஞர்கள் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பட்டாகத்தியால் பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிய மர்ம நபர்கள்: அலட்சியம் காட்டும் காவல்துறை
author img

By

Published : Mar 17, 2019, 5:31 PM IST

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாமியப்பன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவது வழக்கம். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு வாலிபர்கள் ரூ.600 பெட்ரோல் நிரப்பும்படி ஊழியரிடம் கூறியுள்ளனர். பெட்ரோலை நிரப்பிய ஊழியர் முருகேசன், அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.

அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து அமர்ந்திருந்த இளைஞர், பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, மறைத்து வைத்திருந்தமூன்று அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை வெளியே எடுத்து காட்டி மிரட்டி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர்.இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது.

அந்த இரண்டு இளைஞர்களும் கடந்த ஒரு வாரமாக நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் பங்கை நோட்டம் விட்டபடி சென்றதாகவும், அவர்கள் பேசுவதை வைத்து, தென்மாவட்டத்தை சார்ந்தவர்கள் போல் இருப்பதாக ஊழியர்கள், காவலர்களிடம் கூறியுள்ளனர். இது குறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக பங்க் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பெட்ரோல் நிரப்பிய இளைஞர்கள் இருவர் பணம் கொடுக்காமல் 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை காட்டி ஊழியர்களை மிரட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெருமாநல்லூர்  அருகே ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சாமியப்பன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.இதில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணிபுரிவது வழக்கம்.இன்னிலையில் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த இரு வாலிபர்கள் 600 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பும்படி அன்று பணியில் இருந்த முருகேசன் என்ற ஊழியரிடம் தெரிவித்துள்ளனர்.
அவரும் பெட்ரோலை நிரப்பி முடித்து பணம் கேட்டுள்ளார்.அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து அமர்ந்திருந்த இளைஞர் பணம் எடுப்பதுபோல் பாசாங்கு செய்துவிட்டு வண்டி ஓட்டி வந்த நபரின் முதுகுப்பையில் இருந்து 3 அடி நீளமுள்ள பட்டாக்கத்தியை வெளியே எடுத்து காட்டி மிரட்டிய படி வாகனத்தை எடுத்துகொண்டு சென்றுள்ளது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது.
இந்த இரு மர்ம இளைஞர்களும் கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் பங்கை நோட்டம் விட்டபடி சென்றதாகவும்,அவர்கள் பேசிய போது அவர்கள் தென்மாவட்டத்தை சார்ந்தவர்கள் போல் தெரியவந்ததாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பெருமானல்லூர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்ட நிலையில் இது வரை வழக்கு பதிவு செய்யாமல் இருப்பது தெரியவந்துள்ளது.,இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.