சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் சிறந்த விளங்கிய ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நற்சான்றிதழ் வழங்கிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு விபத்துகள் குறைந்துள்ளன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளன. விபத்துகளை குறைக்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளைக் கடைபிடித்து விபத்தில்லா மாவட்டமாக திருப்பூர் மாவட்டத்தை மாற்றவேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அம்மா ஆம்புலன்ஸ் தயார் நிலையில் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படும். காளைகளுக்கு காயம் ஏற்பட்டால் உடனுக்குடன் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.
இதையும் படிங்க: ’சி.ஏ.ஏ. குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல; குடியுரிமையை வழங்கும் சட்டம்’ - அமைச்சர் விளக்கம்