திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் கேபிள் நிறுவனத்தின் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு கேபிள் டிவி எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்ட பின்பு 22 லட்சமாக இருந்த அரசு கேபிள் டிவி எண்ணிக்கை 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். ஒரு மாதத்தில் 35 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.