திருப்பூர் குமரனின் 116ஆவது பிறந்தநாளையொட்டி திருப்பூர் ரயில்நிலைத்தில் உள்ள நினைவிடத்தில் அவரது சிலைக்கு தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திருப்பூர் குமரனின் பிறந்தநாளை முன்னாள் முதலைமச்சர் ஐெயலலிதா அரசு விழாவாக அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் நினைவகத்தில் நீண்ட நாள் செயல்படாமல் இருந்த படிப்பகம் இன்று முதல் தொடர்ந்து செயல்படும் என்றார். இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், திருப்பூர் குமரனுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. அதில் மார்பளவு சிலையும், வாழ்க்கை வரலாற்றை விளக்கும் கண்காட்சி அரங்கும், படிப்பகமும் அமைக்கப்பட்டு மாநகராட்சி சார்பில், பராமரிக்கப்பட்டு வந்தது. திருப்பூர் மாவட்டமாக தரம் உயர்த்திய பின், குமரன் நினைவு மண்டப படிப்பககம் மூடுடப்பட்டது. படிப்பகத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென பலமுறை வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. பெரும்பாலான நேரம் வளாகம் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான படிப்பகம் இன்று முதல் செயல்படும் என கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தெரிவித்தது மகிழ்ச்சியளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தூர்வாரும் பணி நடைபெறுவதால் தண்ணீர் திறந்துவிட தாமதம்!