ETV Bharat / state

’மின் கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வு தமிழில் எழுத நடவடிக்கை’ - அமைச்சர் தங்கமணி

திருப்பூர்: தமிழ்நாட்டில் மின் கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

minister-thangamani-function
minister-thangamani-function
author img

By

Published : Mar 7, 2020, 9:31 AM IST

திருப்பூர் மாநகர மாவட்ட அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆயிரத்து 72 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் நடைபெற்றது.

இதில் மாநில மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அமைச்சர் தங்கமணி பேச்சு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ”ஆயிரத்து 300 மின் கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனம் நடத்துவதால், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டது எனது கவனத்திற்கு வந்தது.

பின்பு முதலமைச்சருடன் பேசி தற்போது தமிழிலேயே எழுத உத்தரவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சிக்காகவே மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’சசிகலாவால் அரசியல் மாற்றம் நடக்கும்’ - சுப்பிரமணியன் சுவாமி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.