2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்துவருகிறது. காலை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், ரஜினி, அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தாருடன் வந்து, உடுமலை நகராட்சித் தொடக்கப்பள்ளியில், வரிசையில் நின்று தனது வாக்கினைச் செலுத்தினார்.
இதையும் படிங்க: ஜனநாயகக் கடமையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி