ETV Bharat / state

தீபாவளி தினத்தில் திருப்பூர் கடைவீதிகளில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்!

Diwali Purchase in Tiruppur: தீபாவளி நாளான இன்று திருப்பூரில் உள்ள கடை வீதிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தீபாவளி பொருட்களை வாங்குவதற்காக சாரை சாரையாக குவிந்தனர்.

தீபாவளியன்று திருப்பூர் கடைவீதிகளில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 5:32 PM IST

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழிலை நம்பி மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இரண்டரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள், இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு திருப்பூரில் குழுவாகவும், நிறுவனங்களிலும் மாதக்கணக்கில் தங்கி பணியாற்றும் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சுமார் ஒன்றரை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மொத்தமாக இடம் பெயரும் இந்த தீபாவளி நேரத்தில், போதுமான ரயில் வசதி இல்லாததால் ஏராளமானோர் திருப்பூரிலேயே தங்கி தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.

எனவே, இவர்கள் திருப்பூரில் உள்ள கடை வீதிகளில் தீபாவளி நாளான இன்று, பொருட்கள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர். அந்த வகையில், திருப்பூர் மத்திய பேருந்து நிலையம், புதுமார்க்கெட் வீதி, முனிசிபல் ஆபீஸ் வீதி, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் சாரை சாரையாக வந்து பொருட்கள் வாங்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொருவரும் துணிக்கடைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட கடைகளில் திரண்டு பல்வேறு பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால் ஹோட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் காணப்படுகிறது. மேலும், திருப்பூரின் முக்கிய கடைவீதியான புதுமார்க்கெட் வீதியில், வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர்.

பெரும்பாலான வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு பொருட்களை வாங்கி விட்டு, ரயில்களில் ஏறி தங்களின் சொந்த மாநிலம் செல்வர். மேலும், ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் திரும்பி வந்து, தாங்கள் இருக்கும் இடத்திலேயே தங்கி விட்டு, நாளையும் ரயிலைத் தேடிச் செல்வர். இந்நிலையில், இப்படி வடமாநிலத் தொழிலாளர்கள் கடை வீதிகளில் குவியத் தொடங்கி உள்ளதால், திருப்பூரில் உள்ள கடை வீதிகளில் வியாபாரம் களை கட்டுகிறது.

நடைபாதை கடைகளிலும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடைபெற்று வருகிறது. மேலும், இன்று மாலை வரை புலம்பெயர் தொழிலாளர்களின் கூட்டம் இருக்கும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்.. சாத்தனூர் அணையில் குவிந்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.