தமிழ்நாட்டுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி, விநாயகர் சதுர்த்தியன்று பல இடங்களில் வெடிகுண்டு வைப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேசிய புலானாய்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து, இந்தியாவில் 15 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அழைப்பு விடுத்தவர் யார்? எங்கிருந்து அழைத்தார்? போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததைக் கண்டறிந்து, பொன்ராஜை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.