ETV Bharat / state

மாநகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

திருப்பூர்: பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு வழித்தடம் விடாததை கண்டு கொள்ளாத மாநகராட்சியைக் கண்டித்து பெண் ஒருவர் மாநகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!
author img

By

Published : May 7, 2019, 10:04 PM IST

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வரும் தம்பதி சேகர் - ஹேமலதா. இவர்கள் வீட்டிற்கு செல்லும் பொது வழித்தடத்தை மறித்து மூர்த்தி என்பவர் வீடு கட்டியுள்ளார்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த ஹேமலதா, மாநகராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஹேமலதா

இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில், தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து ஹேமலதா கலைந்து சென்றார்.

திருப்பூரில் பக்கத்து வீட்டுக்காரர் தங்கள் வீட்டிற்கு வழி விட மறுத்ததால் பெண் தீ தீக்குளிக்க முயற்சி.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் குடியிருக்கும் சேகர் - ஹேமலதா தம்பதியருக்கு சொந்தமான வீட்டிற்கு பொது வழித்தடத்தை விடாமல் மூர்த்தி என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாகவும் பல முறை மனு அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் ஹேமலதா மாநகராட்சி அலுவலகத்தில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதனை கண்ட  மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள்  அவரை தடுத்து நீரை ஊற்றினர். இதனையடுத்து தனது குடும்பத்தினருடன் மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஹேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அங்கிருந்து கலைந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.