திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான டாக்டர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உடுமலைப்பேட்டை திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டி நாளை நிறைவுபெறுகிறது. விளையாட்டில் பங்குபெறும் ஒரு அணிக்கு எட்டு வீரர்கள், ஐந்து ஓவர்களைக் கொண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த விளையாட்டில் வெற்றிபெற்று முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரொக்கமாக ரூ.30 ஆயிரம் பரிசும், இரண்டாம் இடத்திற்கு ரூ. 20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 15 ஆயிரமும், நான்காம் இடத்திற்கு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பேட்ஸ்மேன் அடிக்கும் சிக்ஸர் பந்துகளை ஒற்றைக் கையால் பிடிப்பவர்களுக்கு பிரேத்தியகமாக ஆயிரம் ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போடியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.