ETV Bharat / state

போலி நகை கொடுத்து நூதன மோசடி! - thiruppur

திருப்பூர்: தாராபுரம் நகைக் கடையில் போலி நகைகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட முயன்ற இரண்டு பெண்களை நகைக் கடை உரிமையாளர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

போலி நகை கொடுத்து நூதன மோசடி!
author img

By

Published : Jul 12, 2019, 8:15 PM IST

தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ராஜீ என்பவருக்கு சொந்தமான வி.கே.ஆர்.ஜுவல்லரி உள்ளது. இந்த கடைக்கு பர்தா அணிந்த இரண்டு பெண்கள் கை குழந்தையுடன் வந்து தங்களிடம் உள்ள பழைய தங்க நகையை மாற்றி புதிய நகை எடுக்க வேண்டும் என கூறியதோடு அந்த பெண்கள் பழைய தங்க சங்கிலி ஒன்றை கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர்

தாராபுரம் நகைகடை

அந்த நகையை சோதனையிட்ட கடை உரிமையாளர் ராஜூவும், கடை ஊழியர்களும் அந்த பெண்களுக்கு புதிய நகைகளை எடுத்து காட்டியுள்ளனர். அப்போது புதிய நகைகளை பார்ப்பது போல் நோட்டமிட்ட அந்த பெண்கள் தாங்கள் கொண்டுவந்த தங்க சங்கிலியை எடுத்து அவர்களுடைய பையில் போட்டுவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு செயினை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.

இதை கவனித்த கடை உரிமையாளர் அந்த பெண்களிடம் கேட்க முயன்ற பொழுது இரண்டு பெண்களில் ஒருவர் கடைக்குள் இருந்து தப்பயோடியுள்ளார், கடை உரிமையாளர் ஓடிய பெண்ணை விரட்டி சென்று பிடித்துவந்தனர். கடைக்குள் கைக்குழந்தையுடன் இருந்த மற்றொரு பெண்ணையும் பிடித்து தாராபுரம் போலிசாரிடம் ஒப்படைத்தார்.

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:தாராபுரம் நகைகடையில் போலி நகைகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட முயன்ற சேலத்தை சேர்ந்த ராதா, தனலட்சுமி ஆகிய இரண்டு பெண்களை கையும் களவுமாக பிடித்த நகைகடை உரிமையாளர் தாராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Body:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் ராஜீ என்பவருக்கு சொந்தமான வீ.கே.ஆர்.ஜுவல்லரி உள்ளது. இந்த கடைக்கு பர்தா அணிந்த இரண்டு பெண்கள் கை குழந்தையுடன் வந்து தங்களிடம் உள்ள பழைய தங்க நகையை மாற்றி புதிய நகை எடுக்க வேண்டும் என கூறியதோடு அந்த பெண்கள் பழைய தங்க சங்கிலி ஒன்றை கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர் அந்த நகையை சோதனையிட்ட கடை உரிமையாளர் ராஜூவும், கடை ஊழியர்களும் அந்த பெண்களுக்கு புதிய நகைகளை எடுத்து காட்டியுள்ளனர் அப்போது புதிய நகைகளை பார்ப்பது போல் நோட்டமிட்ட அந்த பெண்கள் தாங்கள் கொண்டுவந்த பழைய தங்க செயினை நைசாக எடுத்து அவர்களுடைய பையில் போட்டு விட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு செயினை அந்த இடத்தில் வைத்துள்ளனர். இதை கவனித்த கடை உரிமையாளர் ராஜூ இது குறித்து அந்த பெண்களிடம் கேட்க முயன்ற பொழுது இரண்டு பெண்களில் ஒருவர் கடைக்குள் இருந்து தப்பயோடியுள்ளார் இதை தொடர்ந்து கடை உரிமையாளர் ராஜீ மற்றும் அக்கம் பக்கத்தினர் சாலையில் ஓடிய பெண்ணை விரட்டி சென்று பிடித்து வந்தனர். கடைக்குள் கைக்குழந்தையுடன் இருந்த மற்றொரு பெண்ணையும் பிடித்து தாராபுரம் போலிசாரிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட இரண்டு பெண்களிடமும் போலிசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேலம் தாதக்காபட்டியை சேரந்த கோவிந்தனின் மனைவி ராதா, மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மனைவி தனலட்சுமி என்பதும் கையில் இருந்த குழந்தை தனலட்சுமியுடைய குழந்தை என்பதும் இவர்கள் இருவரும் ஈரோடு, கோவை, சேலம் பகுதிகளில் இதுபோல் பல இடங்களில் கைவரிசையை காட்டி மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் பிடிபட்ட ராதா கடந்த ஒருவாரத்திற்கு முன்புதான் கோவை சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலிசார் வேறு பகுதிகளிலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.