ETV Bharat / state

பரம்பரை வைத்தியரின் தவறான சிகிச்சை - வீட்டில் முடங்கிய மாணவி! - பரம்பரை வைத்தியரின் தவறான சிகிச்சை

திருப்பூர்: பரம்பரை வைத்தியர் அளித்த தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் முடங்கிய மாணவி
author img

By

Published : Nov 1, 2019, 7:46 PM IST

திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தனபால்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். இவருக்கு சில நாட்களாக வலது தோளில் தழும்பு போன்ற தோள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த தனபாலிடம் தெரிந்தவர்கள் சிலர், பொள்ளாச்சியைச் சேர்ந்த பரம்பரை சித்த வைத்தியரான மருகு மகேந்திரன் என்பவர் சிறப்பாக சிகிச்சை அளிப்பதாகவும், அவரிடம் அழைத்துச் சென்றால் தோள் பாதிப்பு சரியாகிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதை நம்பிய தனபால், சித்த வைத்தியர் மகேந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார். அவரும் தோள் வியாதியை குணப்படுத்த கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மூலிகை மூலம் குணப்படுத்துவதாகக் கூறி கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அந்த மூலிகையை தோள் பாதிப்பு உள்ள இடத்தில் தடவியுள்ளார்.

அதை தடவிய சில மணி நேரத்தில் பாதிப்பு சரியாகாமால், தீயில் வெந்தது போன்று தழும்பு உருவாகியுள்ளது. இதைக் கண்டு பயந்த தனபால், மகளை ஆங்கில மருத்துவரிடம் அழைத்துச்சென்று காண்பித்துள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சித்த வைத்தியர் தடவிய மருத்து மூலிகை இல்லை என்றும், டைல்ஸ் கற்களுக்கு பூசுப்படும் ஆசிட் என்றும் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மகேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் முடங்கிய மாணவி

இதுகுறித்து மாணவியின் தந்தை தனபால் கூறுகையில், ‘சித்த மருத்துவர் மருகு மகேந்திரன் எனது மகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மருந்தில் ஆசிட்டை பயன்படுத்தியுள்ளார். இதற்கு அவரிடம் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனது மகள் இந்த நிலைக்கு காரணமான சித்த வைத்தியர் மகேந்திரனுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டை மாணவி சித்த மருத்துவத்தில் இந்திய அளவில் முதலிடம்

Intro:பரம்பரை வைத்தியரின் மரு நீக்கும் மருந்து தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Body:திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் ராஜேஸ்வரி தம்பதியினர் இவர்கள் அந்த பகுதியில் நூல் கடை நடத்தி வருகின்றனர் இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் அவருடைய மகளுக்கு சிறிது காலமாக வலது தோளில் சில பாதிப்புகள் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் பல்வேறு முறைகளில் அவர்கள் சிகிச்சை மேற்கொண்டு அந்த நோயை குணப்படுத்த முயன்றுள்ளனர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுமிக்கு அந்த தோல் நோய்க்காக நீண்ட நாட்களாக மருத்துவம் பார்த்தும் நோய் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது எனவே தெரிந்தவர்கள் மூலம் பல்வேறு இடங்களில் விசாரித்து வந்தனர் அப்பொழுது பொள்ளாச்சியை சேர்ந்த பரம்பரை வைத்தியர் மகேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டு தங்களின் மகள் நிலையை விளக்கி உள்ளனர் அடுத்த நாள் தனபால் வீட்டிற்கு சென்ற வைத்தியர் மருது மகேந்திரன் தான் பரம்பரை வைத்தியர் என் குடும்பம் பரம்பரை பரம்பரையாக சித்த வைத்தியம் பார்த்து வருகிறது சிறுமியின் தோல் பாதிப்பை குணப்படுத்த கொல்லிமலையில் இருந்து வைரத்தை விட அரிதான மூலிகை மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார் மேலும் அந்த மருந்தை மாணவியின் தோலில் தடவி யுள்ளார் அதன் பிறகு சிகிச்சை அளிப்பதற்காக 5 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு மருது மகேந்திரன் சென்றதாக கூறப்படுகிறது அடுத்த சில நாட்களிலேயே சிறுமியின் தீ காயம் பட்டது போல் வெந்து போனது இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் இதற்கு மேலும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆங்கில மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தனர் அப்போது மாணவி மீது தடவுவது மூலிகை மருந்து அல்ல டைல்ஸ் கற்களுக்கு பூசப்படும் ஆசிட் என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்தது இதனால் சிறுமியின் தோல் மிகவும் தீக்காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் அதனை சரி செய்ய இயலாது கட்டுப்படுத்த மட்டுமே முடியும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர் இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பரம்பரை வைத்தியர் என்ற பெயரில் மோசடி செய்த மருது மகேந்திரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்திய மருத்துவ சட்டத்தின்கீழ் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருது மகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மகேந்திரனை போலீசார் விசாரித்தனர்.

Conclusion:இதுகுறித்து மாணவியின் தந்தை தனபால் கூறுகையில் சித்த மருத்துவர் மருகு மகேந்திரன் எனது மகளுக்கு சிகிச்சை என்ற பெயரில் மருந்தில் ஆசிட்டை பயன்படுத்தியுள்ளார் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் செய்துள்ளேன் எனது மகளின் இந்த நிலைக்கு காரணமான அந்த மகேந்திரனுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பு அளிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.