ETV Bharat / state

'ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப் போறீங்க!' வசந்த குமாரிடம் கேட்ட அழகிரி

திருப்பூர்: கன்னியாகுமரி வசந்தகுமாரிடம் உங்கள் தொகுதியில் வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுக்க போகிறீர்கள் என்று தானே கேட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி
author img

By

Published : May 9, 2019, 3:03 PM IST

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் இன்று நடைபெற்றது. பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேனியில் இரண்டு வாக்குச்சாவடிக்கு எந்த கட்சியும் மறுவாக்குப்பதிவு கேட்காதபோது எதற்காக மீண்டும் வாக்குபதிவு நடைபெறுகிறது என்ற கேள்விக்கு ஆணையம் பதில் சொல்ல வேண்டும்.

சமீப காலமாக மிகக்கடுமையான வார்த்தைகளை மோடி பயன்படுத்திவருகிறார். பதவி மரபுகளுக்கு விரோத செயல்களில் மோடி ஈடுபடுகிறார். சொந்த அமைச்சர்களையே நம்பாத மோடி , ராஜீவ் காந்தியை குற்றம் சொல்கிறார்.

பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவைகள்தான் வன்முறைகளில் ஈடுபட்டன. திமுக என்பது அரசியலில் பக்குவப்பட்ட இயக்கம். சந்திரசேகர் ராவ் ஒருவேளை ஸ்டாலினை சந்தித்து மூன்றாவது அணி குறித்து பேசினாலும், அது நடைமுறை சாத்தியம் இல்லை என்றுதான் ஸ்டாலின் கூறுவார்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் மதச்சார்புள்ள கட்சி, மதச்சார்பற்ற கட்சி என இரண்டுதான் உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நிற்பது என்பது இப்போதையை சூழலில் சாத்தியமற்றது.

தேர்தல் ஆணையம் செயல்பாடுகளால் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போகும் நிலையுள்ளது. கன்னியாகுமரி வசந்தகுமாரிடம் உங்கள் தொகுதியில் வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுக்க போகிறீர்கள் என்று நானே கேட்டேன். ஆனால், அந்த ஊரில் பணம் கொடுக்கும் கலாசாரம் இல்லை என்று அவர் சொன்னார்.

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றுதான் உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அமைச்சரவையின் தீர்மானத்தைதான் முடிவாக எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என்று எங்கள் கட்சி தலைமையே சொல்லிவிட்டது.

சட்டத்திற்கு உட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே. இப்படிதான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. நீதி இவ்வாறுதான் வழங்கப்பட வேண்டும் என சிறு சிறு குழுக்கள் முடிவு செய்யக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றும் , இந்த முடிவை தான் எடுக்க வேண்டும் என ஆளுநரை வலியுறுத்த கூடாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , இவ்வாறு கூறினார். 

திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , 
தேனியில் 2 வாக்குசாவடிக்கு எந்த கட்சியும்  மறுவாக்குபதிவு கேட்காத போது எதற்காக மீண்டும் வாக்குபதிவு நடைபெறுகிறது என்ற கேள்விக்கு ஆணையம் பதில் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார். மோடியின் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர் , 
மிகக்கடுமையான வார்த்தைகளை சமீப காலத்தில்  மோடி பயன்படுத்தி வருகிறார் என்று கூறினார். மேலும் , மரபுகளுக்கு விரோத செயல்களில் மோடி ஈடுபடுவதாகவும் ,  சொந்த அமைச்சர்களையே நம்பாத மோடி , ராஜீவ் காந்தியை குற்றம் சொல்வதாகவும் குற்றம்சாட்டினார். 
இந்திய அரசியலில் கொலைகள் செய்த ஒரே கட்சி மோடி சார்ந்துள்ள பாரம்பரியம் தான் என்று கூறியவர் பா.ஜ.க , ஆர்.எஸ்.எஸ் போன்றவைகள் தான் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் கூறினார். மேலும் , 3 வது அணி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு , திமுக என்பது அரசியலில் பக்குவப்பட்ட இயக்கம்,  சந்திரசேகரராவ் ஒருவேளை ஸ்டாலினை சந்தித்து மூன்றாவது அணி குறித்து பேசினாலும் , அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று தான் ஸ்டாலின் கூறுவார். தற்போதைய நிலையில் இந்தியாவில்  மதசார்புள்ள கட்சி , மதச்சார்பற்ற கட்சி என இரண்டு தான் உள்ளதாக கூறினார். அரசியல் கட்சிகள் தேர்தலில் தனித்து நிற்பது என்பது , இப்போதையை சூழலில் சாத்தியமற்றது என கூறியவர் , தேர்தல் ஆணையம் செயல்பாடுகளால் இளைஞர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாம் போகும் நிலை உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். வாக்குக்கு பணம் குறித்த கேள்விக்கு, கன்னியாகுமரி வசந்தகுமாரிடம் உங்கள் தொகுதியில் வாக்குக்கு எவ்வளவு பணம் கொடுக்க போகிறீர்கள் என்று நானே கேட்டேன்... ஆனால் , அந்த ஊரில் பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை என்று அவர் சொன்னதாக குறிப்பிட்டார். 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு , 
ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தான் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளார்கள் ,  அமைச்சரவையின் தீர்மானத்தை தான் முடிவாக எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. ஆளுநர் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம் என்று கூறினார். மேலும் , ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என்று எங்கள் கட்சி தலைமை ஏற்கனவே சொல்லிவிட்டது. சட்டத்திற்கு உட்பட்டு எது நடந்தாலும் எங்களுக்கு சம்மதமே... இப்படிதான் முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க கூடாது. நீதி இவ்வாறு தான் வழங்கப்பட வேண்டும் என சிறு சிறு குழுக்கள் முடிவு செய்ய கூடாது என்றும் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.