தருமபுரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் செந்தில்குமார். திமுகவைச் சேர்ந்தவரான இவர், மருத்துவராகப் பணியாற்றி வந்தார். பின்னர், கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பியாக தேர்வானார்.
ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் எப்போதும் தன்னை ஆக்டிவாக வைத்துக்கொள்ளும் பழக்கம் உடையவரான இவர், தனது நாடாளுமன்ற உரை, தொகுதி சார்ந்த பிரச்னைகள் போன்றவற்றை ட்விட்டரில் தொடர்ந்து பதிவிடுவார். இந்நிலையில், நாடாளுமன்ற அலுவல்களைக் காண்பதற்கு ஆசையாக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் சிலர் பதிவு செய்தனர்.
செந்தில்குமார் எம்.பி ட்வீட் இதையடுத்து, தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்த செந்தில்குமார் எம்.பி, தற்போதுவரை 70 பேரை நாடாளுமன்ற அவைக்கு அழைத்துச் சென்று அசத்தியுள்ளார். பலர் அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை தங்களின் ட்விட்டரில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துவருகின்றனர்.
பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உறவினர்களை மட்டுமே நாடளுமன்ற அவை நடவடிக்கைகளை பார்க்க அழைத்துச் செல்லும் நிலையில், வித்தியாசமான முறையில் திமுக எம்.பி செந்தில்குமார் செயல்படுவது அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்.பி. செந்தில்குமார் சிறப்பு நேர்காணல்!
Intro:இப்படியும் ஒரு எம்.பி.யா ட்விட்டர் நண்பர்களை நாடாளுமன்றம் அழைத்துச் சென்ற தர்மபுரி திமுக எம்பி.Body:இப்படியும் ஒரு எம்.பி.யா ட்விட்டர் நண்பர்களை நாடாளுமன்றம் அழைத்துச் சென்ற தர்மபுரி திமுக எம்பி.Conclusion:டுவிட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு நாடாளுமன்றத்தை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்த தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார். தர்மபுரி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் (ஆக்டிவாக) சுறுசுறுப்பாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் அவர் பேசிய காணொளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் செய்த பரிந்துரைகள் போன்றவற்றை தனது ட்விட்டர் வலைதளத்தில் அவர் பதிவிட்டு வருகிறார்.நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரை பின்தொடரும் டுவிட்டர் நண்பர்கள் நாடாளுமன்ற அலுவல்களை காண ஆசையாக இருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க ஏற்பாடு செய்வதாக நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி பலர் அவரது ட்விட்டர் பக்கத்தில் நாடாளுமன்ற பார்வையாளர்கள் பகுதியில் இருந்து பார்க்க தங்களது விருப்பத்தை தெரிவித்து இருந்தனர். அவர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் 70 பேரை நாடாளுமன்ற கூட்டத்தொடரை பார்க்க அனுமதி பெற்றுத் தந்துள்ளார் அவர்களும் நாடாளுமன்ற பார்வையாளர்கள் பகுதிகளில் இருந்து பார்த்தனர் .பல நாடாளுமன்ற அவையில் செந்தில்குமார் எம்பி உடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இன்னும் வரும் வாரங்களில் 100 பேர் வரை கலந்து கொள்ள ஆர்வம் காட்டி உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உறவினர்களை மட்டுமே நாடளுமன்ற அவை நடவடிக்கைகளை பார்க்க அழைத்துச் செல்வார். இன்னும் சிலர் தனது கட்சியினரை மட்டுமே அனுமதிப்பார்கள். ஆனால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது தொகுதி மக்களுக்கான பிரச்சினையாக இருந்தாலும் தன்னை சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் ஆக இருந்தாலும் அவற்றை நிறைவேற்றி தருவதில்(பாஸ்டாக) வேகமாக இருக்கிறார்.