விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் எனும் தலைப்பில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக திமுக மகளிரணி செயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருப்பூர் அமர்ஜோதி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் திருப்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக இல்லை. வேலை வாய்ப்புகள் அதிகளவில் தரக்கூடிய பின்னலாடை தொழில் நிறைந்த திருப்பூரில் கரோனா, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டிருந்தபோது மாநில அரசும், மத்திய அரசும் உதவிக்கரமாக இல்லை.
அதிமுக அரசின் குடிமராமத்து சாதனை என்பது ஏட்டளவில் மட்டுமே நடைபெற்றது. அதிமுக விளம்பரம் கொடுப்பது திமுகவிற்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் அரசின் பணத்தில் அல்லாமல் அதிமுகவின் பணத்தில் கொடுக்க வேண்டும். திமுக கட்சி இதுவரை யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை. கொள்கை ரீதியாக முரண்பாடு ஏற்பட்டால் கூட்டணியிலிருந்து வெளியேற தைரியம் திமுகவிற்கு இருக்கிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அறிவிக்கும் முதலமைச்சர் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது ஏன் என்பதை விளக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: