திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து சமூகவலைதளங்களில் தகாத வார்த்தைகளை கூறி கருத்து கேட்பது போல் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உடுமலை நகர அதிமுகவினர் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட உடுமலை காவல்துறையினர் அமைச்சர் பற்றி தகாத வார்த்தைகளை முகநூலில் பதிவிட்டதாக, திமுகவைச் சேர்ந்த பாலகுமார் என்பவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாலகுமாரன் தரப்பு கூறுகையில், முகநூல் கணக்கு மூன்று மாதத்திற்கு முன்பே முடக்கப்பட்டதாகவும், இந்தப் பதிவு எப்படி வந்தது என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பழுதடைந்த சாலை: செப்பனிட்டுத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!