மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை அடித்து துன்புறுத்திய காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தடுப்பையும் மீறி மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதையும் படிங்க: சமத்துவம் குறித்து பேச பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது? - கனிமொழி