திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் பெண்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் என்.ஏ.எஸ். நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (செப். 27) மாலை 4 மணியளவில் மருத்துவமனையின் கரோனா பிரிவிலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, நோய்த்தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் உடல் அவரது படுக்கையிலேயே ஐந்து மணி நேரமாக அகற்றப்படாமல் இருந்ததால், ஏற்கனவே அதே வார்டில் கரோனா அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த பெண் நோயாளிகள் 20 பேரும் நோய்த்தொற்று வேகமாகப் பரவி சிகிச்சைப் பெற்றுவரும் தங்களது உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் என பீதியடைந்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலிருந்து வெளியேறி மருத்துவமனை வளாகத்திலேயே வெளிநடப்பு போராட்டம் நடத்தினர்.
கரோனா நோயாளிகளின் போராட்டத்திற்குப் பின் இரவு 9 மணிக்கு மூதாட்டியின் உடல் அரசு மருத்துவமனை அமரர் ஊர்தியில் வெளியே அனுப்பப்பட்ட பின்பும் வார்டு முழுவதையும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் வரை யாரும் உள்ளே செல்ல மாட்டோம் எனக் கூறி மருத்துவமனை வளாகத்திலேயே நோயாளிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்ற நோயாளிகள் பீதி அடைந்தனர்.
இதையும் படிங்க: சென்னை: சைதாப்பேட்டை எம்எல்ஏ சுப்பிரமணியனுக்கு கரோனா உறுதி!