கரோனா பரவல் குறைய தொடங்கியதால் பொது போக்குவரத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று 57 பயணிகளுடன் வந்துள்ளது. பேருந்தில், நடத்துநர் பயணிகளுக்கு டிக்கெட் (பயணச்சீட்டு) வழங்கும் போது, எச்சில் தொட்டு பயணச்சீட்டை கிழித்து வழங்கியுள்ளார்.
இதைப் பார்த்த பேருந்தில் பயணித்தவர்கள், கரோனா காலகட்டத்தில் இதுபோல எச்சில் தொட்டு பயணிக்களுக்கு பயணச்சீட்டு வழங்க வேண்டாம் என்று கூறியுள்ளார்கள். அதனைப் பொருட்படுத்தாமல் நடத்துனர் மீண்டும் மீண்டும் அதேபோல் செய்ததாக கூறப்பட்டுகிறது.
இது குறித்து பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரதுறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அரசு பேருந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும், அந்த நடத்துநருக்கு பேருந்து நிழற்குடையில் வைத்தே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், கரோனா காலங்களில் நடத்துநர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சுகாதாரதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.