தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(45). இவர் திருப்பூரில் சமையல் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள காட்டன் மார்க்கெட் சாலை ஓரத்தில் வசித்து வந்துள்ளார்.
இவருக்கும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சமையல் தொழிலாளியான சக்திவேல்(52) என்பவருக்கும் கடந்த சில நாள்களாக சாலையில் படுத்து தூங்க, இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஸ்கரன் கடந்த 31ஆம் தேதி இரவு இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக்திவேலை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, இருவருக்கும் நேற்று (செப். 01) இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சக்திவேல் அருகிலிருந்த கல்லால் பாஸ்கரனை தாக்கியுள்ளார். இதில், பாஸ்கரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவல்துறையினர், பாஸ்கரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:போஸ்டர் நகரமாக மாறிய கோவை!