ETV Bharat / state

'ஆங்கிலேயர்களின் அடிவருடிகள்...கல்விக்கொள்கையை புரிந்து கொள்வது கடினம்'- சி.பி. ராதாகிருஷ்ணன்! - சி பி ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையை புரிந்து கொள்வது கடினம் என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Bjp radhakrishnan press meet  திருப்பூர் மாவட்டச் செய்திகள்  ஆங்கிலேயர் அடிவருடிகள்  புதிய கல்விக்கொள்கை  திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக  சி பி ராதாகிருஷ்ணன்  cibi radhakrishnan
ஆங்கிலேயர்களின் அடிவருடிகள்...கல்விக்கொள்கையை புரிந்து கொள்வது கடினம்
author img

By

Published : Aug 6, 2020, 10:16 AM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆக.5) அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது நாடெங்குமுள்ள நீதியை விரும்பக்கூடிய மக்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

Bjp radhakrishnan press meet  திருப்பூர் மாவட்டச் செய்திகள்  ஆங்கிலேயர் அடிவருடிகள்  புதிய கல்விக்கொள்கை  திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக  சி பி ராதாகிருஷ்ணன்  cibi radhakrishnan
கரசேவைக்கு சென்றவர்களை வாழ்த்திய சி.பி

மும்மொழிக் கல்விக் கொள்கையை அதிமுக ஆதரிக்காதது குறித்த பேசுகையில், “அதிமுக-பாஜக வெவ்வெறு அரசியல் இயக்கங்கள், கொள்கைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால், புதிய கல்விக்கொள்கை தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் உள்ளது. ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருந்தவர்கள் புதிய கல்விக் கொள்கையைப் புரிந்து கொள்வது கடினம்” என்றார்.

அயோத்திக்கு கரசேவைக்கு சென்றவர்கள்

மேலும், தமிழ்நாட்டில் தற்போதுவரை ஆங்கில மொழி என்ற ஒரு மொழிக் கொள்கையே இருந்து வருவதாகவும், பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களே தெரியாத வகையில் இருக்கும் சூழ்நிலையில், ஐந்தாம் வகுப்புவரை தமிழ் கட்டாயம் என்று உரக்கச் செல்கிறது புதிய கல்விக் கொள்கை. இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கூடிய புதிய கல்விக் கொள்கையை வரவேற்காமல் வசை பாடுபவர்களின் நிலை குறித்து காலம் பதில் சொல்லும்" என்றும அவர் கூறினார்.

இதையும் படிங்க: தீக்குளிப்பதை தவிர வேறு வழியில்லை - வாகன ஓட்டுநர்கள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.