திருப்பூர் மாவட்டம் அருள்புரம் பகுதியில் தேவகி என்பவர் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளார்கள்.
இதனிடையே தீபாவளிக்கு முன்னதாக அனைவரும் பணத்தை கட்டி முடித்த நிலையில் சீட்டு தொகையை கேட்டபோது தேவகி காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பணத்தை திருப்பி தருவதாக உத்தரவாதம் அளித்து தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இதனால் சீட்டு பணம் கட்டி பாதிக்கப்பட்டவர்கள் இன்று (டிச. 16) திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்தனர். 50க்கும் மேற்பட்டோர் உடனடியாக தேவகி மீது நடவடிக்கை எடுத்து தங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.