ETV Bharat / state

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு! - thiruppur boy died after falling into a water tank

திருப்பூர்: நான்கு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

boy-died-after-falling-into-a-water-tank

author img

By

Published : Oct 9, 2020, 1:22 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அம்மாபாளையம் நேரு நகரைச் சேர்ந்தவர் ஜான் விக்டர். இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம் நடத்தி வருகின்றார். இவருடைய மனைவி வசந்தி. இவர்களுக்கு 4 வயதில் கவின்குமார் என்ற மகன் உள்ளார். இன்று(அக்.9) காலை வசந்தியின் தாயார் ஈஸ்வரி கவின்குமாரை தான் பணிபுரியும் சேடபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு ஈஸ்வரி பணியில் ஈடுபட்டிருந்தபொழுது கவின்குமார் அங்கு விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது கவின்குமாரை காணவில்லை. இதனையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடினர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் கவின்குமார் விழுந்து கிடந்தது தெரியவந்தது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த பல்லடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

சிறுமி பாலியல் வன்கொடுமை - 50 வயது நபர் போக்சோவில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.