ETV Bharat / state

’அரசியலுக்காக கிராமசபைக் கூட்டம் நடத்தும் திமுக’ - சி.பி.ராதாகிருஷ்ணன் தாக்கு - DMK Grama sabha meeting news

திருப்பூர் : ஆட்சியில் இருந்தபோது கிராமசபைக் கூட்டங்களை மக்கள் நலனுக்காக நடத்தாத திமுக, தற்போது அரசியலுக்காக நடத்தி வருவதாக பாஜகவின் கேரள மாநிலப் பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரத்த தானம் வழங்கிய பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Dec 25, 2020, 3:23 PM IST

பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் பாஜக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கேரள பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரத்த தானம் வழங்கினார்.

பாஜக சி.பி. ராதாகிருஷ்ணன்
ரத்த தானம் செய்த சி.பி.ராதாகிருஷ்ணன்

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “’தமிழ்நாட்டில் தாமரை மலருமா’ என்று கேட்டவர்கள் மத்தியில், ’தாமரை இல்லாமல் ஆட்சி மலராது’ என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இம்முறை தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணி வைத்திருக்கிறது. இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும்.

மேலும், இதுவரை ஆட்சியில் இல்லாததுபோல் திமுக திடீரென மக்கள் நலனுக்காக கிராமசபைக் கூட்டம் நடத்துவது போல பாவனை செய்கிறது. ஆட்சியில் இருந்தபோது முறையாக கிராமசபைக் கூட்டங்களை திமுக நடத்தவில்லை என்பதை மக்கள் நன்கு அறிவர்” என்றார்.

இதையும் படிங்க...நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.