திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர்களுடனான கலந்தாய்வு கூட்டமானது மாநகர துணை ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர், போக்குவரத்துக் காவல் துறையினர், ஆட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாநகர துணை ஆணையர் பத்ரிநாராயணன், மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் அதிவேகமாகச் செல்லக் கூடாது என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் செல்லும் வழியில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால் அது குறித்தான பிரத்யேக தொலைபேசி எண்ணுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க...ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: கருணை இல்லத்துக்கு கிடைத்த அரசின் கருணை!