தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உடுமலை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மறையூர், காந்தலூர், தலையாறு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அமராவதியின் நீராதாரங்களான பாம்பாறு, சின்னாறு, தேனாறு, உள்ளிட்ட ஆறுகளிலிருந்து விநாடிக்கு 2,272 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் 43 அடியாக இருந்துவந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிவரை உயர்ந்து 48 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.