ETV Bharat / state

பேருந்து நிறுத்தத்திற்கு இடையூறாக விளம்பர பேனர்கள்; அகற்ற கோரிக்கை! - bus stop

திருப்பூர்: பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால், பேருந்துகள் வருவது தெரியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பேனர்கள்
author img

By

Published : Jun 5, 2019, 7:26 PM IST

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஊராட்சி அண்ணா குடியிருப்பில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம், 2012ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இப்பேருந்து நிறுத்தம் உடுமலைப்பேட்டை பழனி பிரதான சாலையில் அமைந்துள்ளது. தினந்தோறும் ஏராளமான பயணிகள், பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். நிறுத்தத்தின் பக்கவாட்டில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருக்கும் பொதுமக்களுக்கு, எந்த பேருந்து வருகிறது, செல்கிறது என்று பார்க்க முடிவதில்லை.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்கள்: அரசு கவனிக்குமா ?

தொலைவிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வரும் பயணிகளும், பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது உள்ள விளம்பர பேனர்களால் பேருந்துகள் வருவது தெரியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்து நிறுத்தமும் யாருக்கும் உபயோகமில்லாமல் காணப்படுகிறது.

பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர்களை அரசு நீக்க வேண்டும் என்று உடுமலைப்பேட்டை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:விளம்பர பேனர்கள் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வைத்திருப்பதால் பேருந்துகள் வருவது தெரியாமல் அவதிப்படும் மக்கள்

Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்திருக்கும் அண்ணா குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கும் பேருந்து நிறுத்தம் 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இப்பேருந்து நிறுத்தம் உடுமலை பழனி பிரதான சாலையில் அமைந்திருக்கிறது இதை தினந்தோறும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர் இந்நிலையில் இப்பெயர் நிறுத்தத்திற்கு அருகில் பெரிய பேனர்கள் வைப்பது வழக்கம் இதனால் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருக்கும்போது பேருந்து வருவது அங்கு அமர்ந்து இருப்போருக்கு தெரியாது எனவே அப் பயணியர் நிழற்குடை யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் காணப்படுகின்றது இங்கு வரும் பயணிகள் பெரும்பாலானோர் அந்த நிழற்குடையை பயன்படுத்தாமல் வெளியே நின்று அவதிக்குள்ளாகியுள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.