தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி செட்டிப்பாளையம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், நான்கு லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்த ஹரீஷ், ஹபீப் ஆகிய இருவரிடம் நடத்திய விசாரனையில், இருவரும் கேரளாவிலிருந்து திருப்பூரில் உள்ள கடைகளுக்கு ஏலக்காய்களை விற்பனை செய்து வந்ததாக தெரிவித்த நிலையில், அவர்கள் வைத்திருந்த நான்கு லட்சம் ரூபாய்க்கான உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து பின் கருவூலத்தில் சேர்த்தனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.53 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்