திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிதாக 256 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் நான்கு ஆயிரத்து 446 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிகிச்சைப் பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது, ஆயிரத்து 529 பேர் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், கரோனா தொற்றால் இன்று சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: காற்றில் பறந்த கரோனா நெறிமுறை: காங்கிரஸ் கூட்டத்தில் தள்ளுமுள்ளு!