தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 972 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 688ஆக அதிகரித்துள்ளது.
இதில், திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 18 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 12 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.