ETV Bharat / state

கோவிட்-19 வைரஸ் வதந்தி பரப்பிய இளைஞர்கள் கைது

வேலூர்: சமூக வலைத்தளங்களில் இரண்டு இளைஞர்களுக்கு கோவிட்-19 வைரஸ் இருப்பதாக வதந்தி பரப்பிய குடியாத்தத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Mar 18, 2020, 2:09 PM IST

Updated : Mar 18, 2020, 9:26 PM IST

சமூக வலைத்தளங்களில் கரோனா வதந்தி பரப்பிய இளைஞர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நேற்று முன்தினம் கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு இளைஞர்களின் படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோவை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வதந்தியை பரப்பியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் கோவிட்-19 வதந்தி பரப்பிய இளைஞர்கள்

இந்நிலையில் பொய் வீடியோவில் இடம் பெற்ற பாதிக்கப்பட்ட இரண்டு இளைஞர்கள் பெற்றோருடன் வந்து குடியாத்தம் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோவிட்-19 வைரஸ் பற்றி வதந்தி பரப்பிய குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் கோவிட்-19 வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கரோனாவை பற்றி கவலைப்படாமல் ஹரித்வாரில் குவிந்த பக்தர்கள்

Last Updated : Mar 18, 2020, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.