திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஜலம்கார் பைசான் (30). இவர் கடந்த நான்கு நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக அதே பகுதியில் உள்ள யுனானி மருத்துவர் அத்தர் சையது என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த மருத்துவர், இளைஞருக்கு அலோபதி மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். அதன்பின் பைசானும், வாணியம்பாடியில் உள்ள மருந்துக் கடையில் மருந்தை வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜலம்கார் பைசான் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து இளைஞரின் இறப்பு குறித்து சந்தேகமடைந்த அப்பகுதியினர், வாணியம்பாடி கோட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம், காவல்துறையினர் உள்ளிட்ட அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியவில்லை' - இ-பாஸ் கிடைக்காத விரக்தியில் நபர் தற்கொலை