திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது மூதாட்டி, பிப்ரவரி 8ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த 26 வயது இளைஞர் மூதாட்டியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அப்போது மூதாட்டி கூச்சலிட முயன்றபோது, சத்தம் போட்டால் கொலை செய்வேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். பின்னர், இதுகுறித்து மூதாட்டி, ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, இளைஞரை கைது செய்தனர். பின்னர் இளைஞரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவனை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய உறவினர் கைது!